Header Ads



இது மோசடியானதும், மிக ஆபத்தானதுமான போலிச் செய்தி

 
வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் செய்தி தற்போது பகிரப்படுகிறது. இது மோசடியானதும், மிக ஆபத்தானதுமான போலிச் செய்தியாகும் என பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


தனிநபரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காகவும், கைப்பேசிகளின் மென்பொருளை மாற்றியமைப்பதற்காகவும் இந்த மோசடி செய்திகள் பகிரப்படுகின்றது.

இது தொடர்பில் கணினி அவசர தயார்நிலை குழுவுக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளது. கைப்பேசிகள் மூலம் வங்கிச் சேவை செய்பவர்கள் இதுபோன்ற போலிச் செய்திகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்தார். அறிவுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.