Header Ads



இறைச்சிக் கடைகளில் அடாவடி


இறைச்சிக் கடைகளில், உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் , வாடிக்கையாளர்களிடம் அடாவடித்தனமாக நடந்து கொள்வதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது. 


தனி இறைச்சி எலும்பு கலந்த இறைச்சி  இன்னும் சில  ரகங்களில் இங்கு இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. .எனினும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய விதத்தில் இறைச்சி முறையாக வகைப்படுத்தப்படுவதில்லை என தெரியவருகிறது.


தனி இறைச்சி என்னும் பெயரில் எழும்பும் கலந்து விற்பனை செய்கிறார்கள். அதுபோலவே எழும்புடன் விற்பனை செய்யப்படும் இறைச்சியில் அதிக விகிதத்தில் எழும் இருப்பதாகவும் மிகவும் சொற்ப அளவிலான இறைச்சி இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர் .


ஹட்டன் தோட்டங்களில் வசிக்கும் மக்கள் இந்த கடையின் வாடிக்கையாளர்கள் என்பதால் அவர்களை அலட்சியம் செய்வதாகவும் இது தொடர்பாக பேசினால் அவர்களை தரம் குறைவாக ஏசி பேசுவதாகவும்  தெரியவருகிறது.


“ஹட்டன் மாட்டிறைச்சி  கடையில் வாடிக்கையாளர்களுக்கான மதிப்பும் மரியாதையும் கிடைப்பதில்லை.வாடிக்கையாளர் இறைச்சி தொடர்பாக ஏதாவது கேட்கையில் சரியான பதில் கிடைப்பதில்லை. மாறாக நக்கல் நையாண்டியாக பதில் கிடைக்கிறது விலைக்கு தகுந்த பொருள் கிடைப்பதில்லை வியாபாரிகளின் பேச்சிகள் கேட்டு பெரும் மன உளைச்சல் ஏற்படுகிறது” என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். 


எனவே இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


செ.தி.பெருமாள்

No comments

Powered by Blogger.