Header Ads



இலங்கையில் உரிய தரம் அல்லாத மின்சார உபயோகப் பொருட்களினால் உயரும் மின் கட்டணம்


இலங்கையில் உரிய தரம் அல்லாத வீட்டு மின்சார உபயோகப் பொருட்கள் அதிக மின்சாரக் கட்டணத்திற்குக் காரணம் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. 


இந்தப் பிரச்சினை  10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகளிலும், குளிரூட்டிகளினாலும் ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக, மாதத்திற்கு 100 அலகுகளுக்கும் மேல் மின்சார நுகர்வு ஏற்படுகின்றது. 


இலங்கைக்குள் உரிய தரம் அல்லாத மின் உபகரணங்களை இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு இறுதிக்குள் குளிரூட்டிகளுக்கும் இந்த விதிமுறைகள் கடுமையாக்கப்படவுள்ளது.


(இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்ரமசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்)

No comments

Powered by Blogger.