அமைச்சரவையில் செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சர் நியமனம்
பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் வாழும், முஸ்லிம் நாடுகளில் ஒன்றான அல்பேனியாவில் 100 வீதம் ஊழலை ஒழிப்பதற்காக, புதிய அமைச்சரவையில் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளது.
பொது நிதி திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் அரசாங்கத்தின் கேள்விப்பத்திர கோரல்களில் ஊழலை எதிர்த்துப் போராடுதல் போன்றன (AI) அமைச்சரின் பொறுப்புகளில் அடங்கும்.
அல்பேனிய மொழியில் 'சூசியா' என்று பொருள்படும் 'டீலா' என்ற அமைச்சர், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட அமைச்சராக அமைச்சரவையில் உறுப்பினராக உள்ளார் என்று பிரதமர் எடி ராமா தெரிவித்துள்ளார்.

Post a Comment