Header Ads



ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 600 பேர் உயிரிழந்து, 1,500 பேர் காயம்


கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 600 பேர் உயிரிழந்தனர். 1,500 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் எல்லைக்கு அருகே கிழக்கு ஆப்கானிஸ்தானில்  6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.


இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. அடுத்தடுத்து 2 நிலநடுக்கத்தால் நகங்கர் மாகாணத்தில் மக்கள் அஞ்சமடைந்தனர். 

No comments

Powered by Blogger.