ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 வது அமர்வு - ஜெனீவா சென்ற வெளிநாட்டு அமைச்சர்
வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். நாளை (08) ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜெனீவாவில் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

Post a Comment