Header Ads



காணாமல் ஆக்கப்பட்டவர்கள் - சுயாதீனமான விசாரணைகளை ஆதரிப்பதில் UN உறுதியாக இருக்கின்றது


இலங்கையில் மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித என்புக்கூடுகள், தனிப்பட்ட உடைமைகள் என்பன கடந்த கால மனித உரிமை மீறல்களின் அளவையும், நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீன விசாரணைகளுக்கான அவசரத் தேவையையும் வலியுறுத்துகின்றன என்று இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ்ச் தெரிவித்துள்ளார்.


சர்வதேச காணாமல்போனோர் தினமான நெரூர் அறிக்கையொன்றை வெளியிட்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


சர்வதேச காணாமல்போனோர் தினம் அனைத்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நினைவை மதிக்கும் ஒரு நாள் என்றும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் இந்த மீறலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளவோ, மன்னிக்கவோ அல்லது மறக்கவோ கூடாது என்பதை நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த நாளிலும், ஒவ்வொரு நாளும், தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும் ஒவ்வொரு குடும்பத்துடனும் ஐக்கிய நாடுகள் சபை உறுதுணையாக நிற்கின்றது.


பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்கள் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீண்டும் நிகழாததற்கான உத்தரவாதங்களுக்கான உரிமைகளை உணர முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த நம்பகமான, சுயாதீனமான விசாரணைகளை ஆதரிப்பதில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து உறுதியாக இருக்கின்றது என்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ்ச்  குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.