ரணிலுக்கு NPP யிடமிருந்து பதிலடி
இளைஞர் கழகங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட கருத்துக்கு, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர பதிலளித்துள்ளார்.
அவர், முந்தைய அரசாங்கங்கள் தேசிய இளைஞர் மன்றத்தையும் கழகங்களையும் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் பிரசாரத்துக்காக ரூ.536 மில்லியன் செலவிடப்பட்டதாகவும், அதில் ரூ.68 மில்லியன் மோசடி செய்யப்பட்டதாக கண்காய்வாளர் நாயக அறிக்கையில் கூறுவதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கம் தற்போது 12,000இற்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இளைஞர் சங்கங்களை நிறுவி, 32 ஆண்டுகளுக்கு பின் தேசிய இளைஞர் மாநாட்டை ஆகஸ்ட் 12ஆம் திகதி நடத்தவுள்ளதாக அவர் கூறினார்.
முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில், அரசியல் கட்சிகள் இளைஞர் கழகங்களை கட்டுப்பாட்டில் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

Post a Comment