Header Ads



11 மணி 45 நிமிடங்கள் குர்ஆன் மனப்பாடம் ஒப்புவித்து சாதனை


ஹாஃபிழ் முஹம்மது யாசிர். தொடர்ந்து 11 மணி 45 நிமிடங்கள் குர்ஆன் மனப்பாடம் ஒப்புவித்து ஸனது பெற்ற அபூர்வ சாதனையாளர்  முஹம்மது யாசிர் டாக்டர் அஹ்மத் நஸீம் பாகவி - ஹப்ஸா தம்பதியர் மகன்.


பாலக்காடு மாவட்டத்தில் பட்டிசேரி  முனவ்வருல் இஸ்லாம் ஹிப்ளுல் குர்ஆன் அகாடமியில் பயின்றவர். கடின முயற்சியுடன் தொடர்ந்து குர்ஆன் வசனங்களை மனப்பாடம் செய்வதில் காட்டிய ஆர்வமும் குறுகிய காலத்தில் முஹம்மது யாசிர் ஹாஃபிழ் ஸனது வாங்க முடிந்தது.


ஃபஜ்று தொழுகைக்கு பின்,   காலை 6.30 மணிக்கு சூரத்துல் ஃபாத்திஹாவுடன் மனப்பாடம் ஒப்புவிக்க துவங்கிய யாசிர்  இஷா தொழுகையுடன் பூர்த்தி செய்து  புதிய சாதனை படைத்துள்ளார்.


இடையில் மூன்று வேளை தொழுகை,  உணவு தேநீர் இடைவேளை போக  மொத்த குர்ஆனையும்  ஒப்புவிக்க 11மணி45நிமிடங்களில் ஓதி முடித்து ஹாஃபிழ் ஸனது பெற்றுள்ளார்.

Colachel Azheem

No comments

Powered by Blogger.