Header Ads



நாட்டிற்கு வந்துகுவியும் சுற்றுலாப் பயணிகள் - இந்தியர்கள் முதலிடம்


ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை மொத்தம் 99,406 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்தியாவில் இருந்து 19,572 பேர் இந்த மாதம் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், இது 19.7% ஆகும். 


மேலும், ஓகஸ்ட் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10,970 பேரும், இத்தாலியிலிருந்து 7,641 பேரும், பிரான்சிலிருந்து 6,870 பேரும், சீன நாட்டினர் 6,762 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 


இதற்கிடையில், ஓகஸ்ட் மாதத்திற்கான சமீபத்திய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,467,694 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.