Header Ads



அரசாங்கத்தையும், படையினரையும் குறிவைக்கும் பொய்ப் பிரச்சாரங்களால் ஏமாற வேண்டாம்


அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால் ஏமாற வேண்டாம் என  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


முல்லைத்தீவு சிவநகரில் உள்ள 12வது சிங்க படைப்பிரிவின் முகாமுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை முன்னிறுத்தி நாளை (18) ஹர்த்தால் இடம்பெறவுள்ளது. 


இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, 


"இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். 


இந்த சம்பவத்தின் உண்மைகளை திரிபுபடுத்தி, தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்த சில அரசியல் குழுக்கள் முயற்சிப்பதாகத் தெரிகிறது. 


எனவே, நாட்டு மக்கள் உண்மைகளைப் புரிந்துகொண்டு அமைதியாக நடந்து கொள்ள வேண்டும்." என்றார்.

No comments

Powered by Blogger.