சபாநாயகரின் இல்லத்தை "பாராளுமன்றக் கற்கைகள், ஆய்வு மையமாக” மாற்ற இணக்கம்
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை "பாராளுமன்றக் கற்கைகள், ஆய்வு மையமாக” மாற்றுவது தொடர்பாக இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளிலும் சட்டமன்ற மற்றும் நிர்வாகத் திறன்களை வலுப்படுத்துவதை முதன்மையான குறிக்கோளாகக் கொண்டு, சிறந்த ஆய்வு வசதிகள், சிறப்புப் பயிற்சிகள் மற்றும் கொள்கைப் பகுப்பாய்வுகளை இந்த மையத்தின் ஊடாகப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
உத்தேச மையம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர், பாராளுமன்ற செயலகத்தின் கீழ் செயற்படும் இந்த மையம், முதன்மையாகப் பாராளுமன்றத்தின் நிதியொதுக்கீடுகள் மூலமாகவும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் பொதுநாலவாய பாராளுமன்ற ஒன்றியம் போன்ற சர்வதேச நிறுவனங்களின் கூட்டாண்மையின் மூலமும் நிதியளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

Post a Comment