கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணை ஆரம்பம்
முன்னாள் Mp உதய கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (27) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment