Header Ads



இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் உன்னதமான, நேர்மையான, அளப்பரிய பங்கு


- Nooh Mahlari - 


1946-ஆம் ஆண்டு இங்கிலாந்து பிரதமர் கிளெமென்ட் அட்லியும் இங்கிலாந்து நாடாளுமன்றமும் ஒரு முடிவுக்கு வருகிறது. 


என்னவென்றால் இனிமேலும் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்காமல் நம்மால் இருக்க இயலாது. போராட்டம் உச்ச கட்டத்தை எட்டிவிட்டது. ஆனால் அப்படிக் கொடுப்பதாக இருந்தால் மிகவும் நுட்பமாகக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.


காரணம் அதில் அதில் ஒரு சிக்கல் இருந்தது. அதாவது ஜின்னா பாகிஸ்தான் வேண்டும் என்கிறார். காந்திஜியோ பாகிஸ்தான் வேண்டாம் என்கிறார்.


எனவே எப்படிக் கொடுப்பது? என்கின்ற வினா எழுந்தது. ஆகவே இந்திய சுதந்திரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டது.


அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட இங்கிலாந்து குழுவின் பெயர், "கிரிப்ஸ் குழு” (Cripps Mission)  என்பதாகும்.

இந்தக் குழுவின் தலைவர் சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் (Sir Stafford Cripps) என்பவர் ஆகும்.

இந்தக் குழு ஊரெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, என்ன பண்ணலாம்? எப்படி சுதந்திரம் கொடுக்கலாம்? என்று பேச்சுவார்த்தை நடத்துவதற்காக... 


அரசியல் ரீதியாக மக்களிடம் செல்வாக்கு செலுத்தும் மூன்று கட்சிகளை அழைக்க முடிவு செய்தது. ஒவ்வொரு கட்சியிலிருந்தும் ஒரு பிரதிநிதி வரவேண்டும் என்று கோரினார்கள். 


காங்கிரஸ் சார்பாக ஒருவர். முஸ்லிம் லீக் சார்பாக ஒருவர். அப்போது இந்தியாவில் 542 சிறு குறு சமஸ்தானங்கள் இருந்தன. அந்த சமஸ்தானங்களுக்கு சங்கத் தலைவர் ஒருவர் இருந்தார். அவர்கள் சார்பாக அவர்களுடைய பிரதிநிதி ஒருவர்.


இந்த மூன்று பேரிடமும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு கடைசியாக நாங்கள் முடிவு பண்ணுகிறோம் என்று அந்தக் குழு கூறியது. அவ்வாறு...


இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாகச் சென்றவர் அதன் பொதுச் செயலாளர் அபுல் கலாம் ஆசாத். இவர் ஒரு முஸ்லிம்.


முஸ்லிம் லீக் சார்பாகச் சென்றவர் முஹம்மத் அலி ஜின்னா. இவர் ஒரு முஸ்லிம்.


542 சமஸ்தானங்கள் சார்பாக சென்றவர் பீஹார் நவாப். இவர் ஒரு முஸ்லிம்.


இந்தியாவுக்கு எப்படி சுதந்திரம் கொடுக்க வேண்டும்? என்று பேச்சுவார்த்தை நடத்தச்  சென்ற மூன்று பிரதிநிதிகளும் முஸ்லிம்களே தவிர, ஹிந்துக்கள் அல்ல. 


மூவரில் ஒருத்தர் கூட ஹிந்து அல்ல என்பதை மீண்டும் மீண்டும் அழுத்தமாகக் கூற முடியும். இதற்கு வரலாறு சாட்சி.


அந்த இஸ்லாமியர்களைத்தான் இன்று சுதந்திரத்துக்கு எதிராகவும், நாட்டுக்கு எதிராகவும், சகோதரத்துவத்துக்கு எதிராகவும் திருப்ப முயற்சி செய்கிறார்கள்.


நமது தாயக விடுதலைப் போரில் பங்கேற்று உயிர் தியாகம் செய்த தியாகிகளின் பெயர் பட்டியல் டெல்லி இந்தியா கேட் சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.


அதில் அதிக உயிர் நீத்தவர்கள் பட்டியலில் முஸ்லிம்களே இடம் பெற்றுள்ளனர். நமது தியாகத்தை பறைசாற்ற இந்தவொரு பெருமை மட்டுமே போதும்!


அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகள்!

No comments

Powered by Blogger.