Header Ads



முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சுட்டுக்கொலை


மீகொட, ஆட்டிகல மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இன்று (12) மதியம் உயிரிழந்தார். 


ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ மீது காரில் வந்த குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 


துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். 


பாதுக்கை, வட்டரெக பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை. 


காணித் தகராறுகள் தொடர்பாக உயிரிழந்த சாந்த முதுங்கொட்டுவ பொலிஸில் முறைப்பாடுகள் சிலவற்றை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.