Header Ads



"முன்மாதிரியான பள்ளிவாசல்"


காத்தான்குடிக்கு அன்மித்த ஊர் காங்கேயனோடை இந்த ஊரின்  பள்ளிவாயல்களில் ஒன்றுதான் ஜாமிஉல் மஸ்ஜித் ஜும்மா பள்ளிவாசல்.ஊரின் முதன் முதலாக கட்டப்பட்ட இப் பள்ளிவாசலின் மஹல்லாவில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. 


இக் குடும்பங்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கான எல்லா விதத்திலும் பங்களிப்புகளை செய்து வருகின்றது. இப்பள்ளிவாசலின் நிர்வாக சபை.


அதில் ஒன்றுதான் 2011 ஆண்டு அப்போதைய இப்பள்ளிவாயலின் தலைவராக இருந்த மர்ஹும் அல்ஹாஜ் மௌலவி A.L. ஆதம்லெப்பை(பஹ்ஜி) அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட வட்டி இல்லாத வங்கியாகும்.


சுமார் 14 வருடங்களாக இப்பள்ளி வாயிலில் இயங்கி வருகிறது.


இது பெரும் பாவங்களின் ஒன்றான வட்டியை நாடிச் செல்லும் குடும்பங்களை இனம் கண்டு அவர்களுக்கான வட்டியில்லா கடன் உதவியை வழங்கி வருகின்றார்கள்.


இந்த உதவி திட்டத்தின் மூலம் பள்ளிவாயலின் மஹல்லாவில் இருக்கின்ற பெரும்பாலான குடும்பங்கள் தங்களது கஷ்ட நிலைமையினை ஓரளவுக்கு நிவர்த்தி செய்கின்றனர்.


அதேபோல் இந்த மஹல்லாவில் இருக்கின்ற விதவை தாய்மார்களை இனம் கண்டு அவர்களுக்கும் ஏனையோருக்கு குடும்ப அட்டை இருப்பது போன்று அவர்களுக்கும் தனியாக ஒரு குடும்ப அட்டையினை கொடுத்து பள்ளிவாயிலினால் நோன்பு காலங்களிலும் அதேபோன்று  வேறு நாட்களிலும் கிடைக்கின்ற சகாத் சதகாக்கள் பேரீச்சம்பழம்,உழ்ஹியா இறைச்சி போன்றவைகளும்  தனியா இருக்கின்ற விதவை தாய்மார்களுக்கு பகிர்ந்து அளிக்கின்றனர். 


அதேபோல் நோன்பு காலத்தில் மட்டும் நோன்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நோன்பு நோற்பது போன்று சுன்னத்தான அறபா நோன்பு ஆசுரா நோன்பு பறாத் நோன்பு போன்ற நோன்பினை நோட்பதற்கு ஊக்குவிக்கும் முகமாக பள்ளிவாயலின் மஹல்லா வாசிகளுக்கு நோன்புதிறப்பற்கு   கஞ்சி விநியோகம் மேற்கொள்கிறனர்.


தங்களது பள்ளிவாயலில் சிறிய வருமானத்தை மையமாக வைத்து பல பாரிய முன்னெடுப்புகளை மேற்கண்டு வரும் இந்த பள்ளிவாயல் நிர்வாகம் ஒரு இளைஞர் கட்டமைப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


எம்.எஸ்.எம் றபீக்

No comments

Powered by Blogger.