44 நாட்களுக்குப் பிறகு, பத்திரிகையாளர் மார்வா முஸ்லிமின் உடல் மீட்கப்பட்டது
காசா நகரில் உள்ள, துபா பகுதியில் அவரது வீட்டின் மீது குண்டு வீச்சு நடத்தப்பட்டு 44 நாட்களுக்குப் பிறகு, பத்திரிகையாளர் மார்வா முஸ்லிமின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவரது தியாகத்தை பொருந்திக் கொள்ளட்டும். இதன்போது மேலும் சிலரது உடல்களும் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. காயப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை 44 நாட்களுக்கு முன்னரே மீட்டிருக்க மடியும். எனினும் மீட்புப் பணியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இது ஒரு மிகப் பெரும் போர்க்குற்றம். மனித நேயமற்ற, மனித இதயமற்ற அரக்கர்களினால் மாத்திரமே உயிருக்குப் போராடுபவர்களை சிகிச்சையளிப்பதையோ அல்லது மீட்புப் பணிக்கோ தடை விதிக்க முடியும். குண்டுவீசித் தகர்க்கப்பட்ட கட்டிட குவியல்களுக்கிடையே இதுபோன்று பல ஆயிரம் தியாகிகளின் உடல்கள் அப்படியே இன்னும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment