Header Ads



அரச நிறுவனங்களில் தேவையற்ற பொருட்களை அகற்ற ஒரு வாரம்


 அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்ற விசேட திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


"செயிரி வாரம்" என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 04 ஆம் திகதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 


அரச நிறுவனங்களில் உள்ள அதிகாரிகள் சுதந்திரமாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கு ஏற்ற சுத்தமான, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் ஆபத்தற்ற சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 


இதற்காக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன், அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண தலைமை செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் பிரதானிகள் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


க்ளீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்படவுள்ளதுடன், தேவையான மற்றும் தேவையற்ற பொருட்களை அடையாளம் கண்டு தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவது இதன்போது இடம்பெறவுள்ளது. 


இந்த வாரத்தில் அரசு நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களின் தொகுப்பையும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.