Header Ads



சிந்துஜா மரணம் - மூவர் கைது


மன்னார்  வைத்தியசாலையில் (28-07-2024) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் மரணத்துடன் தொடர்புடையதாக பணி நீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக ஐவரில் மூவர் இன்றைய தினம் (9) கைது செய்யப்பட்டுள்ளனர்.


மருத்துவக் கவனயீனத்தால் ஏற்பட்ட அதீத இரத்தப்போக்கு காரணமாக குறித்த இளம் தாயின் மரணம் சம்பவித்துள்ளது என மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளிவந்தது.  எனினும் இது திட்டமிட்ட மரணம் எனவும் நீதி வேண்டுமெனவும் குடும்பத்தினர் கோரி வந்தனர்.


இந்த நிலையில்  தாதிய உத்தியோகத்தர் ஒருவரும், 2  குடும்ப நல உத்தியோகத்தர்களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் (9)  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 


இதன்போது மன்னார் நீதவான்  மூவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.