முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரை விருப்பம் நிறைவேற, பெரும் உதவியாக முகலாய மன்னர்கள்
ஆனால் தங்களது ஆளுகையின் கீழ் வாழ்ந்த முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரை விருப்பம் நிறைவேற பெரும் உதவியாக முகலாய மன்னர்கள் இருந்துள்ளனர்.
தற்போது பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் குஜராத் மாநிலம் முகலாயர் ஆட்சியில் ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கான தங்குதளமாக விளங்கியுள்ளது.
முகலாயர் ஆண்ட பிரதேசம் முழுவதிலிருந்தும் ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்கள் குஜராத் மாநிலம் சூரத் துறைமுகம் வழியாக தான் கப்பல் மூலம் பயணித்துள்ளனர்.
இதன் காரணமாக சூரத் துறைமுகம் #பாபுல்மக்கா என்று அழைக்கப்பட்டுள்ளது.
அக்பர் மற்றும் ஷாஜஹான் ஆட்சி காலத்தில் குஜராத்திலிருந்து கப்பல் போக்குவரத்து ஏற்பாடு செய்துள்ளனர்.
ஔரங்கசீப் ஆட்சி காலத்தில் அரசாங்க செலவில் இரண்டு கப்பல்கள் இலவசமாக ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது..
முகலாய ராணிகள் பலரும் ஹஜ் செய்துள்ளனர்.
பாபரின் மகள் குல்பதான் பேகம், அக்பர் மனைவி சலீமா பேகம் தலைமையில் 40 பெண்கள் ஹஜ் யாத்திரை சென்றுள்ளது தெரிய வருகிறது..
Colachel Azheem

Post a Comment