கதிரைகளில் ஒட்டிக்கொள்ள எதிர்பார்க்கவில்லை, விலகும் நாளை மனதில்கொண்டே பதவி ஏற்றுள்ளோம் - ஜனாதிபதி
மல்டிபொண்ட் பசை போல இந்தக் கதிரைகளில் ஒட்டிக்கொள்ள எதிர்பார்க்கவில்லை. பதவிகளில் ஒட்டிக்கொள்ளவில்லை, இன்று பதவிகளை வகிக்கிறோம். ஆனால், நாங்கள் பதவி விலகும் நாளை மனதில் கொண்டே இந்தப் பதவிகளை ஏற்றுள்ளோம். என்றென்றும் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. இந்த நாடு அழிவுகரமான குழுவின் கைகளில் இருந்து மீட்கப்பட்டு, இப்போது நாங்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளோம். எதிர்காலத்தில் இந்தப் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கும் எதிர்பார்ப்புடன் பணியாற்றுகிறோம். சிலர் பதட்டப்படுவதில் ஆச்சரியமில்லை. நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், உங்கள் கைகளில் இருப்பதாகக் கூறப்படும் நமது நாட்டின் எதிர்காலத்தின் உண்மையான பாதுகாவலர்களாக உங்களை மாற்றுவதே எமது இலட்சியம்.
தேசிய இளைஞர் மாநாட்டின் இன்றைய (12) விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இவ்வுhறு குறிப்பிட்டார்

Post a Comment