Header Ads



ரணிலின் உடல் நிலையை, வெளியே கூறியே Dr க்கு சிக்கல்


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலை தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.


அதன்படி, கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர், மருத்துவர் ருக்ஷான் பெல்லனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், நோயாளிகளின் உடல் நிலைமை மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தகவல்களை பொதுவாகஊடகங்களுக்கு வழங்குவதில்லை என அவர் கூறியுள்ளார்.


அவ்வாறு செயற்படுவதில் ஒழுக்கம் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்கள் காணப்படுவதாகவும் பிரதி சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தநிலையில், ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவத்துடன், நோயாளியின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


அதனை ஊடகங்கள் அவ்வாறே வெளியிட்டுள்ளதுடன், அதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் பிரதி சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


ஆகவே, அது ஒழுக்க விதிமுறைகளை மீறும் செயற்பாடு எனவும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.