AI யினை முஸ்லிம்களுக்கு எதிராக உபயோகிக்கும் RSS
இந்தியா - ம.பி மாநிலத்தில் மைஹரில் உள்ள மாதா சாரதா கோவிலில் வெடிகுண்டு வெடித்துவிட்டதாகவும், குண்டு வைத்தவர்கள் முஸ்லிம்கள் என்றும் போலி ஏஐ காணொளி தயாரித்து பரப்பி, மக்கள் மத்தியில் குழப்பம் விளைவித்த ஆர்எஸ்எஸ் அமைப்பினைச் சேர்ந்த திப்பான்ஷு குப்தா (வயது 21) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது காணொளியை நாற்பது லட்சம் பேர் பார்வையிட்டும் மக்கள் பதற்றமடைந்தார்களே தவிர, இது உண்மையா என பரிசோதித்து பார்க்கவில்லை, அதிகளவு வீயூவர்ஸ் ஏறிக்கொண்டிருக்கவே சைபர் கிரைம் இதனை கவனித்து குற்றவாளியை கைது பண்ணியுள்ளது.
ஏஐ காணொளிகள் பொழுதுபோக்கானவை மட்டுமல்ல ஆபத்தானவையும் கூட. எச்சரிக்கை தேவை மக்களே. பார்ப்பதையல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் பரப்பிக் கொண்டிருக்காதீர்கள்.
காஸா தொடர்பான சில காணொளிகளும் போலித்தனமானவையே, யாரோ சிலர் பலஸ்தீனியர் மீது பரிதாபம் தோன்றவேண்டும் என்பதற்காக நிறைய போலி காணொளிகளை படைத்து ஊடகங்களில் பரப்பி வருகின்றனர் அவற்றை நாமும் பாராபட்சமின்றி பரப்பி அனுதாபம் சேர்த்துக்கொண்டிருக்கிறோம். அவை போலியானவை என தெரிய வரும் போது உண்மையாகவே பலஸ்தீனியர்கள் படும் அல்லல்கள் எல்லாமே நாடகத்தனமானவையாக சித்தரிக்கப்பட்டுவிடும்.
Nasrath S Rosy

Post a Comment