Header Ads



289 மில்லியன் ரூபாய் வரி செலுத்தாத பியூமி ஹன்சமாலி


மொடல் அழகியான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக 289 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமான வரி செலுத்தாததற்காக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. 


அவர் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான வருமான வரி செலுத்துவதைத் தவிர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. 


வரி குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கைகள் நேற்று (01) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் அழைக்கப்பட்டது. 


அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாமல், நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக  குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.