11 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஒரு கிலோ தங்க பிஸ்கட்கள் பிடிபட்டது
சுமார் 11 ரூபாய் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 1 கிலோ 2.66 கிராம் தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டது.
டுபாயிலிருந்து வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும் போர்வையில் அவை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாகன உதிரி பாகங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை சுங்க அதிகாரிகளுக்கு செலுத்திவிட்டு திரும்பி வந்தபோது, சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment