10 கோடி ரூபா பணத்துடன் 2 பேர் கைது
ராகம, பலுவயில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள், சுமார் 10 கோடி ரூபாய் பணத்துடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், 8.168 கிலோ போதைப்பொருள், 666 கிராம் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 823 000 ரூபாய் பணம், மூன்று மின்சார ஸ்கூட்டர்கள், ஒரு வேன், ஒரு கார், ஒரு முச்சக்கர வண்டி, பல உரிமத் தகடுகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இரண்டு சந்தேக நபர்களும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் அறிவுடன் இந்த கடத்தலை மேற்கொண்டு வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment