Header Ads



ரணிலின் தீர்மானத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ள உயர் நீதிமன்றம்


2022  ஜூலை 17,   அன்று அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் நீதியரசர்  யசந்த கோடகொட உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள்  கொண்ட அமர்வின் பெரும்பான்மையானவர்கள், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் வெளியிடப்பட்ட அவசரகால விதிமுறைகள் தன்னிச்சையானவை மற்றும் செல்லுபுடியாகாதவை என்று தீர்ப்பளித்தனர்.


அரகலய இயக்கத்தின் உச்சக்கட்டத்தின் போது வெகுஜன போராட்டங்களைக் கட்டுப்படுத்த இந்த விதிமுறைகள் இயற்றப்பட்டன. அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டது அடிப்படை சுதந்திரங்களை விகிதாசாரமற்ற முறையில் குறைத்ததாக நீதிமன்றம் தீர்மானித்தது.


இருப்பினும், நீதிபதி அர்ஜுன ஒபேசேகர, இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த விதிமுறைகள் அடிப்படை உரிமைகளை மீறவில்லை என்று தீர்ப்பளித்தார்.


இந்த மனுக்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையர் அம்பிகா சற்குணநாதன், கொள்கை மாற்றுகளுக்கான மையம் மற்றும் லிபரல் இளைஞர் இயக்கம் ஆகியோர் தாக்கல் செய்தனர்.


மனுதாரர்களுக்கான சட்டச் செலவுகளை அரசாங்கம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments

Powered by Blogger.