Header Ads



கோட்டாபய ராஜபக்ஷ ஏன்,இன்னும் விசாரிக்கப்படவில்லை..?

 
பிள்ளையான்  என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனை கைது செய்து சிறையில்  வைத்துள்ளீர்கள்.  அவர் சேட்டை குற்றங்களுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும். நாம் அதற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மையமாக வைத்து அவர் விசாரிக்கப்படுகின்றார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடந்தது 2019.05.21ஆம் திகதி அதேமாதம் 27ஆம் திகதி முன்னர் இந்த நாட்டில் பாதுகாப்பு செயலாளராகவிருந்த கோட்டாபய ராஜபக்ஷ ரொய்ட்டர் செய்தி சேவைக்கு ''இஸ்லாம் மதத்தினால் இந்த மண்ணில் எவ்வாறு தீமை நடக்கபோகின்றது, இஸ்லாம் இந்த நாட்டை எவ்வாறு அழிக்கப்போகின்றது. இதற்கு பின்னால் யார் இருந்தார்கள்'' என்பதனை  சொல்கின்றார். ஆகவே பிள்ளையான் ஒரு கருவி மட்டுமே. கர்த்தாக்களான கோட்டாபய ராஜபக்ஷ ஏன் இந்த நாட்டில் இன்னும் விசாரிக்கப்படவில்லை? 


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பிள்ளையான் ஒரு கருவி. அவரைக் கைது செய்து விசாரிக்கும் அரசு தாக்குதலின் கர்த்தா எனக் கூறப்படும் கோட்டாபய ராஜபக்ஷவை ஏன் கைது செய்து இன்னும் விசாரிக்கவில்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சி Mp சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார் கேள்வி  எழுப்பினார். 


பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23)  விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.