Header Ads



ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் விரைவில் வெளிப்படுத்தப்படுவர்


இலங்கையில் இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் விரைவில் சமூகத்துக்கு வெளிப்படுத்தப்படுவார்கள் என, பெருந்தோட்ட அமைச்சர் சமந்த வித்யாரத்ன   தெரிவித்துள்ளார்.


ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தற்போது விசாரணைகள் நியாயமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை, கர்தினால் மெல்கம் ரஞ்சித்  உள்ளிட்ட அனைவரும் அறிவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த காலங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


ஆனால், இன்று சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்ற நம்பிக்கை அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளதாகவும் பெருந்தோட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.


எனவே ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் யார்? என்பதை வெளிப்படுத்த நீண்ட காலம் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என அவர் மேலும்  தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.