ஹஸ்னா நஸ்ரினை தேடி வந்த, ஒன்றரை கோடி ரூபாய் ஸ்காலர்ஷிப்
கோழிக்கோடு மாவட்டம் காயக்கொடி கிராமத்தை சேர்ந்த நவாஸ் - ஹாஜரா தம்பதியர் மகள் ஹஸ்னா நஸ்ரின். தந்தை கேரள காவல்துறை உதவி ஆய்வாளராகவும், தாய் மேல்நிலைப்பள்ளி ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர்.
பள்ளிப்படிப்பு, இளங்கலை கல்லூரி படிப்பை கோழிக்கோட்டில் படித்த ஹஸ்னா நஸ்ரின் முதுகலை வேதியியல் இந்தியாவின் ஆகச்சிறந்த கல்வி வளாகங்களில் ஒன்றான பெங்களூர் Indian Institute of Science ல் இந்தாண்டு பூர்த்தி செய்தவருக்கு முழு கல்வி உதவித் தொகையுடன் கூடிய மேற்படிப்பு வாய்ப்பு கிடைத்தது.
அமெரிக்க நியூயார்க் பல்கலைக்கழக McCraken Fellowship சாத்தியமானதன் மூலம் ஒன்றரை கோடி ரூபாய் ஸ்காலர்ஷிப்பில் 5 வருட Integrated P.Hd., in Chemistry ஆராய்ச்சி அட்மிஷன் கிடைத்துள்ளது.
Chemical Biology ல் தனது ஆராய்ச்சி மேற்படிப்பை துவங்க போவதாக கூறியுள்ளார் ஹஸ்னா நஸ்ரின்.
Colachel Azheem

Post a Comment