Header Ads



வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் கவனத்திற்கு


வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் பாடசாலைக்கு செல்லும் குழந்தைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவதற்கான விண்ணப்பங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரியுள்ளது. 


இந்தப் புலமைப்பரிசில்கள் 2019.01.01 முதல் 2024.09.15 வரை வெளிநாட்டில் பணிபுரிவதற்காக பணியகத்தில் பதிவுசெய்த பெற்றோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. 


2024 ஆம் ஆண்டு 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலோ, 2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (சாதாரண தர) பரீட்சையிலோ, 2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர்தர) பரீட்சையிலோ சித்தி பெற்று, அரச அல்லது தனியார் பல்கலைக்கழகம், அரச தொழில்நுட்பக் கல்லூரி அல்லது பிற அரச கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இந்தப் புலமைப்பரிசில்களுக்காக விண்ணப்பிக்கலாம். 


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு 25,000 ரூபாவும், க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு 30,000 ரூபாவும், க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு 40,000 ரூபா புலமைப்பரிசிலும் வழங்கப்படும். 


இந்தப் புலமைப் பரிசில்களை பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.slbfe.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். 


2024 ஆம் ஆண்டில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை தொழிலாளர்களின் 2,688 பிள்ளைகளுக்காக 81.12 மில்லியன் ரூபா மதிப்புள்ள புலமைப்பரிசில்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.