மாலைதீவு பயணத்தை வெற்றிகரமாக்கிக் கொண்டு, நாடு திரும்பினார் ஜனாதிபதி
மாலைதீவு ஜனாதிபதி Dr முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நேற்று (30) இரவு நாடு திரும்பினேன்.
இலங்கையின் நெருங்கிய நண்பனும், பங்காளருமான மாலைதீவுடனான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் நிறைவடையும் நிலையில் விஜயத்தின் போது இருநாடு உறவுகளை மேலும் பலப்படுத்தி மாலைதீவு அரசாங்க பிரதானிகளுடனும் மிகவும் வெற்றிகரமான, பயனுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அத்தோடு இந்த விஜயத்தின் போது இருநாடுகளுக்கும் இடையில் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பனவும் பரிமாறப்பட்டன. மாலைதீவில் வசிக்கும் இலங்கையர்களையும் சந்தித்திக்கவும் வாய்ப்புக் கிடைத்தது விசேட அம்சமாகும்.
(ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க)

Post a Comment