கொச்சிக்கடையில் உயிர்களை பலி எடுக்கும், பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை
- இஸ்மதுல் றஹுமான் -
பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் புகையிரதத்தில் மோதி தந்தை மரணம் மகன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொச்சிக்கடை, லூத் மாவத்தையில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்கும் போது சனிக்கிழமை 5ம் திகதி காலை 10.30 மணியளவில் சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதத்தில் மோதி தந்தை அதே இடத்தில் பலியினதுடன் அவருடன் பயனித்த மகன் படுகாயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
நீர்கொழும்பு, பெரியமுல்லை, ஜும்ஆ மஸ்ஜித் மாவத்தையைச் சேர்ந்த மீன் வர்த்தகரான இரு பிள்ளைகளின் தந்தையான 60 வயது ஞானசேகர் என்பவரே அதே இடத்தில் மரணமானார்.
கபொத சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு பெறுபேரை எதிர்பார்த்திருந்த அவரது மகன் செரோன் படுகாயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுப்பப்பட்டுள்ளார்.
இந்தப் புகையிரதக் கடவையில் மூங்கிழ் மரம் மூலமே தற்காலிக கேட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடமையில் இருந்தவர் கடந்த ஒரு மாத்திற்கு முன்பு கடமையிலிருந்து நீங்கியுள்ளர். இவருக்கு மாதம் 7500 ரூபா கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தினால் செலுத்தப்பட்டுள்ளது.
அந்த சம்பளம் போதாது என்றே அவர் விழகியதாக பொலிஸார் தெரிவித்தனர். புகையிரத கடவையின் இரு பக்கமும் "இங்கு சேவையில் ஒருவரும் இல்லை" என்ற வாசகம் பொறுந்திய போட் போடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நீர்கொழும் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த பூதவுடல் நேற்று 6ம் திகதி பிரேத பரிசோதனை நடத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Post a Comment