Header Ads



இந்த மூர்க்கத்தனமான போரைத் தூண்டிய இஸ்ரேல், நம்மை பிராந்திய மோதலுக்குள் இழுக்கிறது


பென்டகனின் முன்னாள் ஆலோசகர் டக்ளஸ் மெக்ரிகரின் முக்கியப் பதிவு:


இந்த மூர்க்கத்தனமான போரைத் தூண்டிய இஸ்ரேல், நம்மை மேலும் விரிவான ஒரு பிராந்திய மோதலுக்குள் இழுத்துச் செல்கிறது; இது ஒரு அணு ஆயுதப் போராகவும் உருவெடுக்கக்கூடும். ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் வளைகுடாவின் பிற பகுதிகளில் உள்ள நமது 40,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். 


அவர்கள் எளிதில் தாக்கக்கூடிய இலக்குகள் ஆவர். ஈரானின் 'ஷாஹித்-136' ட்ரோன் விமானங்கள் வெறும் 20,000 அமெரிக்க டாலரில் தயாரிக்கப்படுகின்றன, அதேசமயம் இதைத் தடுக்கும் அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணை ஒன்றுக்கு 40 இலட்சம் டாலர் செலவாகிறது. 


இது நமது ஏவுகணை கையிருப்புகளை முற்றிலுமாகத் தீர்த்து, நம்மைப் பொருளாதார ரீதியாகப் படுகுழியில் தள்ளும். அதே நேரத்தில், நமது பிள்ளைகள் நாட்டின்(அமெரிக்க) கொடியால் போர்த்தப்பட்ட சவப்பெட்டிகளில் வீடு திரும்புவார்கள்.


Syed Ali

No comments

Powered by Blogger.