அக்கரைப்பற்று மாநகர முதல்வராக அதாஉல்லா பதவிப்பிரமாணம்
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அக்கரைப்பற்றில் வெற்றியீட்டிய தேசிய காங்கிரஸ் உத்தியோக பூர்வமாக மாநகர மற்றும் பிரதேச சபையில் இன்று -02- ஆட்சியமைத்தது.
இதன்போது தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாஉல்லா மாநகர முதல்வராக பதவிப்பிரமாணம் மேற்கொண்டார்.
தொடர்ந்து அக்கரைப்பற்று உட்பட ஏனைய பிரதேசங்களில் சபைக்குத் தெரிவாகிய உறுப்பினர்கள் அனைவரும் அதாஉல்லா முன் பதவிப்பிரமாணம் மேற்கொண்டார்கள். நிகழ்வுகள் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கத்தில் நடைபெற்றது.
Post a Comment