பெருவாரியான அரசியல்வாதிகளின் முகவரியாக மகஸின் சிறைச்சாலை மாறக்கூடும்
ஊழல், குற்றச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகளின் முகவரியாக மகஸின் சிறைச்சாலை மாறிவருகின்றது. கடந்த காலங்களில் , மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொருவராக சிறைச்சாலைக்கு செல்கின்றனர். எதிர்காலத்தில் இந்நாட்டிலுள்ள பெருவாரியான அரசியல்வாதிகளின் முகவரியாக மகஸின் சிறைச்சாலை மாறக்கூடும்.
மக்களின் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கடந்த ஜனாதிபதிகள்கூட 2 சம்பளங்களை பெற்றுவந்தனர். எம்.பிக்களாக இருந்ததற்குரிய சம்பளத்தையும் பெற்றனர். ஜனாதிபதிக்குரிய சம்பளத்தையும் பெற்றனர். ஆனால் எமது ஜனாதிபதி அவ்வாறு செயற்படுவதில்லை. ஜனாதிபதி மாளிகைகளைக்கூட நிராகரித்துள்ளார். எமது அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களும் அப்படிதான். எந்தவொரு சலுகைகளையும் பெறவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சம்பளத்தை மட்டுமே பெறுகின்றோம்.
- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் -
Post a Comment