Header Ads



அணுகுண்டு ஹராம்..!


மிகப் பெரும் அளவில் பேரழிவையும் பெரு நாசத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்ற அணுகுண்டு போன்ற ஆயுதங்களைத் தயாரிப்பதும், வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் ஹராமானது. தடுக்கப்பட்ட செயல் என்று ஈரானிய சுப்ரீம் லீடர் ஆயத்துல்லாஹ் அலீ கமேனி அவர்கள் ஃபத்வா கொடுத்திருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 


அவருடைய இந்த ஃபத்வா தான் ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக மட்டுமே அணுசக்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்கிற ஈரானிய அணுசக்தி கொள்கைக்கான அடிப்படையாக இருந்து வந்துள்ளது. 


1990களிலிருந்து இன்று வரை இதுதான் ஈரானின் முக்கியமான கோட்பாடாக இருந்து வந்துள்ளது. 


வேறு எவர் ஆட்சியில் இருந்திருந்தாலும் இந்நேரம் அணுகுண்டுகளைத் தயாரித்துக் குவித்திருப்பார்கள். இஸ்லாமிய சித்தாந்தம்தான் அணுகுண்டு தயாரிப்புக்குத் தடையாக இருந்து வந்துள்ளது. 


இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதைப் போன்று ஈரான் அணுகுண்டுகளைத் தயாரித்து விட்டது என்கிற அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி முதலில் இஸ்ரேலும் அடுத்து அமெரிக்காவும் ஈரான் மீது பாய்ந்து பிறாண்டியிருக்கின்றார்கள். 


சத்தியம் இறுதியில் வெல்லும் என்பது உறுதி. இன்ஷா அல்லாஹ்.

- Azeez Luthfullah -

No comments

Powered by Blogger.