பிரான்ஸில் இப்படியும் ஒரு, முஸ்லிம் சகோதரர்
இது போன்று தான் கடந்த கிழமை அவருடைய கடைக்குச் சென்று, நான் ரோஸ் பாண் மூன்றையும் கறி bun மூன்றையும் வாங்கி வந்தேன். வீட்டிற்கு வந்து பார்த்தால் அது வழமையை விட முறுகளாக காணப்பட்டது இரண்டு பொருட்களும் அவ்வாறே இருந்தது. ஆனால் அது எங்களுக்கு பிடித்திருந்தால் அதை எல்லோரும் சாப்பிட்டு விட்டோம்.
இதைப் பற்றி எனக்கு ஞாபகம் இல்லை. அதில் குறை கூறுவதற்கும் எனக்கு விருப்பம் இருக்கவில்லை. ஆனால் உண்மையாகவே அது கூடுதலாக முறுகி இருந்தது. இந்த ஹஜ் பெருநாள் உடைய தினத்தில் இரவு பள்ளிக்குச் சென்று வீடு திரும்பும் போது அந்த கடை உரிமையாளர் வந்து, சலாம் கூறி விட்டு சிறிய தொகை பணத்தை எனது கையில் தந்தார்.
நான் எதற்காக என்று கேட்டேன், எங்கள் கடையில் நீங்கள் வாங்கி சென்ற பாண் சாப்பிட முடியாத அளவு முறுகி இருந்தது .அது வீச வேண்டியது, அதை நான் உங்களுக்கு தந்து விட்டேன். என்னை அறிந்து நான் செய்யவில்லை ஆனால் தவறுதலாக அதை தந்து விட்டேன். இந்த பணத்தை எடுங்கள் அப்பொழுதுதான் என்னுடைய மனசு ஆறும் என்றவரிடம், நாங்களும் அதை வீசவில்லை, சாப்பிட்டுவிடோம். அதனால் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை, என்று எவ்வளவு வேண்டாம் என்று கூறியும் அந்த பணத்தை என்னிடம் தந்தால் தான் மன நிம்மதி என்று கூறி என் கைகளுக்குள் திணித்து விட்டு போனார் .
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு யூரோக்காக ஒர பொய்யையும் போலிகளையும் கூறி உழைக்கும் இந்த உலகில் அவர் விற்று அதுவும் நான் சாப்பிட்டு முடிந்த ஒரு பொருளுக்காக மனம் வருந்தி இந்த பணத்தை தருவது எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை.
எல்லாம் வல்ல நாயன் அவரது வியாபாரத்தை விஸ்தீரனமாக்கி நல்லா ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டும் என்று நானும் எனது மனைவியும் துஆ செய்துவிட்டு அவரது பெயரிலேயே அந்த பணத்தை சதக்கா செய்துவிட்டு வந்தோம்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து சதாத்
Post a Comment