Header Ads



இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்காவின் நேரடித் தலையீட்டை எதிர்க்கும் அமெரிக்கர்கள்


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா நேரடியாகத் தலையிடுவது குறித்து ஆலோசித்து வருகிறார். இந்தக் முடிவு பிராந்திய அளவில் மேலும் பெரிய மோதலைத் தூண்டிவிடும் அபாயம் உள்ளது. 

இந்நிலையில், சமீபத்திய கருத்துக் கணிப்பு ஒன்று, டிரம்ப்பின் வாக்காளர்கள் உட்பட பெரும்பாலான அமெரிக்கர்கள் இத்தகைய இராணுவ நடவடிக்கையை ஆதரிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.


சியோனிச இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான இந்த மோதலில் அமெரிக்க இராணுவம் ஈடுபட வேண்டுமா என்று கேட்கப்பட்டபோது, 


பதிலளித்தவர்களில் 60 சதவீதம் பேர் இந்த யோசனையை **எதிர்ப்புத் தெரிவித்தனர்**.


அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று தெஹ்ரான் (ஈரான்) ஏற்கனவே **எச்சரித்துள்ளது**.


TRT  World

No comments

Powered by Blogger.