Header Ads



இலண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் இன்றும் கோளாறு - கடைசி நேரத்தில் இரத்து


இன்று (17)  அகமதாபாத்தில் இருந்து 241 பயணிகளுடன் இலண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில்  கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் இரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்தது. 


கடந்த வாரம் நடந்த விமான விபத்துக்கு பிறகு, இலண்டன் செல்லும் முதல் விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


குஜராத்தின் ஆமதாபாத்தில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம், கடந்த 12ஆம் திகதி விபத்துக்குள்ளானது. இதில், பயணித்தவர்கள் உட்பட மொத்தம் 270 பேர் பலியாகினர்.

No comments

Powered by Blogger.