Header Ads



காசாவை மறந்துவிட வேண்டாம்...!

 


இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ள நிலையில் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் காசாவிலும் தொடர்வதாக ஐக்கிய நாடுகளின் நிவாரண பணிகள் நிறுவனம் (UNRWA) தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக காசவை சர்வதேசம் மறந்துவிடக்கூடாது என்றும் குறித்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.


ஐக்கிய நாடுகளின் நிவாரண பணிகள் நிறுவனம் தமது எக்ஸ் தள பதிவில் இந்த விடயத்தை வலியுறுத்தியள்ளது.


“காஸாவில் இஸ்ரேலியப் படைகளின் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் தொடர்கின்றன. சைரன்கள் இல்லை. பாதுகாப்பு இல்லை. காசாவை மறந்துவிடக் கூடாது” என குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.