பாராளுமன்றத்தில் இவர்களின் பங்களிப்பு
பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைபடுத்தும் Mantri.lk, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர், 225 பாராளுமன்ற உறுப்பினர்களிடையே நிசாம் காரியப்பர் 17வது இடத்திற்கு உயர்த்தியுள்ளது.
இதற்கு முன் அவர் 24வது இடத்தில் இருந்தார்.
மேலும், அவர் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் தொடர்ந்து முதலாவது இடத்தைப் பெற்றுள்ளார். கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் தரவரிசையில் சாணக்கியன் ராசமாணிக்கம் அவர்களுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தையும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் ரவூப் ஹக்கீம் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்.
Post a Comment