Header Ads



முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் குர்பான் - பல இலட்சம் இந்துக்களுக்கு பலனும், லாபமும்....


முஸ்லிம்கள் கொண்டாடும் 2வது சிறப்பு தினமான தியாகத்திருநாள் உலகம் முழுவதும் இன்றும் நாளையும் கடைபிடிக்கப்படுகிறது.


"ஈதுல் அழ்கா" என்றும் பலி பெருநாள் என்றும் முஸ்லிம்களின் இந்த புனித தினத்தில் முக்கிய அம்சங்களாக குர்பானி என்று அந்தந்த நாடுகளின் சூழலுக்கு ஏற்ப ஆடு, மாடு, எருது, ஒட்டகம் இறைவன் பெயரால் அறுத்து பலியிடவும்,  அவற்றின் மாமிசத்தை உறவுகள், ஏழை எளியவர்களுக்கு பங்கிட்டு கொடுப்பதும் காலங்காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.


பாஜக தலைமையிலான சங்க பரிவாரங்களின் ஆட்சி அமைந்த பிறகு வடமாநிலங்களில் குர்பானி சடங்குகள் நடத்துவதில் இடைஞ்சல் ஏற்படுத்தி ஒருவித பதட்டத்தை உருவாக்கி வந்த நிலையில், இந்தாண்டு குர்பானிக்காக கால்நடை சந்தைகள் நடத்தவே மிரட்டலும், அரசுகளே தடைவிதித்ததும் நடந்தது.


ஆனால் தமிழகம் முழுவதும் குர்பானி ஆடுமாடு விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு மிகஅதிகமாக விற்பனை ஆனதாக ஊடகங்களே விரிவாக செய்தி வெளியிட்டுள்ளனர்.


உளுந்தூர்பேட்டை, திண்டுக்கல், மதுரை, கள்ளக்குறிச்சி, செஞ்சி, மேலூர், மேலப்பாளையம் , நாமக்கல் பகுதியில்  கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் குர்பானிக்கான ஆடு மாடு விற்பனை நடைபெற்றுள்ளது...


இதுபோக கிராமப்புற சந்தைகள், குர்பானி விற்பனை கருத்தில் கொண்டு கிராமப்புற மக்கள் வீடுகளில் வளர்த்து விற்பனை செய்யப்படும் ஆடுமாடுகள்  என்று இந்த கணக்குகளை வைத்து பார்க்கும் போது தமிழகம் முழுவதும் கடந்த மூன்று தினங்களில் நூறு கோடிக்கும் அதிகமான கால்நடைகள் முஸ்லிம்களால் வாங்கப்பட்டுள்ளது...


குர்பானியின் தேவைக்கு கால்நடை வளர்ப்பவர்களில் 90சதவீதமும் இந்துக்கள் என்பதும் அவர்கள் பிராணியின் வயது, கொம்பின் அளவு, வாயில் பற்கள் பற்றிய புரிதல் மிக்கவராக இருப்பதை காணமுடியும்..


முஸ்லிம்கள் கொண்டாடும்  பண்டிகை நாளில் ஒரு மாநிலத்தில் மட்டும் நூறு கோடிக்கும் அதிகமான பொருளாதாரம் இந்துக்களுக்கு பயன்படுவதும், நாடு முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் குர்பானி தேவைக்காக சுழற்சி முறையில் புழங்குவதும் சங்க பரிவாரங்களின் மரமண்டைகளுக்கு புரியாதது...


பிள்ளைகளின் கல்வி தேவைக்கு, திருமண செலவுகளுக்காக பக்ரீத் பண்டிகையை எதிர்பார்த்து கால்நடை வளர்க்கும் பல்லாயிரம் இந்துக்களுக்கு குர்பானி சடங்கு பலனும், லாபத்தையும் தருகிறது என்பது ஊடகங்களில் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன..

Colachel Azheem

No comments

Powered by Blogger.