Header Ads



கலக்கிவிட்டார் கமேனி..!


 (Azeez Luthfullah)


உலக மகா ரவுடியை மண்டியிட வைத்துவிட்டார். ஆம். நிபந்தனையின்றி சரணடைந்துவிடு என்று கொக்கரித்தவனை, டெஹ்ரானை உடனே காலி செய் என்று ஆர்ப்பரித்தவனை, ஈரானின் சுப்ரீம் லீடரைக் கொன்றுவிடுவேன் என்று கூப்பாடு போட்டவனை போ
ர் நிறுத்தம் பற்றிய அறிவிப்பை வெளியிடச் செய்திருக்கின்றார் கமேனி.


ஆறே ஏவுகணைகள்தாம். முன்கூட்டியே சொல்லிவிட்டு ஏவப்பட்டவைதாம். டிரம்பை வழிக்குக் கொண்டு வந்துவிட்டன.


ஒன்று போர் நிறுத்தம் செய் அல்லது இடத்தைக் காலி செய் என்று வளைகுடா நாடுகள் தந்த நிர்ப்பந்தம்தான் டிரம்பை ஆட்டங் காணச் செய்துவிட்டது.


கமேனியின் இந்த அதிரடி நடவடிக்கை மூன்று பலன்களை அறுவடை செய்திருக்கின்றார். ஒன்று, யூரேனியம் செறிவூட்டுதல் தொடர்பாக இனி எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடம் இல்லை. இரண்டாவதாக போருக்கு முந்தைய நிலையே நீடிக்கும். மூன்றாவதாக ஆட்சி மாற்றத்துக்கான பேச்சுக்கே இடம் இல்லை.


ஈரான் சொன்னதைச் சாதித்துவிட்டது. அமெரிக்கத் தளத்தின் மீதான தாக்குதல் நடத்தி பழிதீர்த்துக் கொண்டது.


அமெரிக்காவும் இஸ்ரேலும்தாம் மூக்குடைபட்டு நிற்கின்றன. இஸ்ரேலில் ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்புகள் அதிகமாகிவிட்டன. அமெரிக்காவில் டிரம்பின் பிம்பமும் நோபல் பரிசு பற்றிய டிம்பின் கனவும் சுக்குநூறாக உடைந்து நொறுங்கிவிட்டன.

போர் வெறியனாக, முன்னுக்குப் பின் முரணாகப் பேசுபவராக, பொய் உரைப்பவராக, திடீர் திடீர் என்று பல்டி அடிப்பவராக, சொகுசு, ஆடம்பரப் பிரியராக, கர்வமும் அகம்பாவமும் பிடித்தவராக, இஸ்ரேலின் அடியாளாக மதிப்பிழந்து நிற்கின்றார் டிரம்ப்.

ஆயத்துல்லாஹ் கமேனி அவர்களோ ஈமானிய உறுதியும் கொள்கைப் பற்றும் நிறைந்த ஒப்பற்ற தலைவராக, சத்தம் போடாமல் தன் நாட்டு மக்களை அறிவியல் தொழில்நுட்பக் களங்களில் மேம்படுத்திய தொலைநோக்கு மிக்க தலைவராக, நாட்டு மக்களின் அடிப்படை வசதிகளை, கல்வியை, மருத்துவத்தை உறுதிசெய்த சிறந்த ஆட்சியாளராக, எல்லாவற்றுக்கும் மேலாக உலக மகா ரவுடியின் கொட்டத்தை முறித்தவராக, வீரஞ்செறிந்த மக்களின் நாயகராக ஓங்கி நிற்கின்றார்.


எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே..!


No comments

Powered by Blogger.