Header Ads



முஜிபுர் ரஹ்மான் குறிப்பிடும் 62 பேர் கையெழுத்திட்ட ஆவணம் எங்கே..?


வெட்கம் காரணமாகவே எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றிலிருந்து வெளிநடப்புச் செய்ததாக பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் பொது பாதுகாப்பு தொடர்பான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார் கொழும்பு மாநகர சபையில் தோல்வி ஏற்க முடியாமல் இவ்வாறு வெளிநடப்புச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


எதிர்க்கட்சி பாராளுமன்றத்தை புறக்கணித்தது, கொழும்பு மாநகர சபை தேர்தலில் சந்தித்த தோல்வியை ஏற்க முடியாமையே காரணம் என சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.


இன்று (17) நடைபெற்ற, தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகள் தடுக்கும் சட்டமூல விவாதத்தின் போதே அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.


கொழும்பு மாநகர சபைக்கு இரகசிய வாக்கெடுப்பு அனைத்து உறுப்பினர்களின் அனுமதியுடன் நடத்தப்பட்டது என்றும், மாகாண ஆணையாளர் மற்றும் பிற நிர்வாக அமைப்புகள் சட்டப்படி செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும், முஜிபுர் ரஹ்மான் அவர்கள் குறிப்பிடும் 62 பேர் கையெழுத்திட்ட ஆவணம் எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்புவதாகவும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.