Header Ads



இலங்கையர் ஒருவருக்கு மாதாந்தம் 16342 ரூபா போதுமா..?


தனிநபர் ஒருவர் தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் குறைந்தபட்சம் 16342 ரூபா தேவைப்படுவதாக 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு தரவுகளை தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


தரவுகளின் அடிப்படையில், 25 மாவட்டங்களில் அதிக செலவினத்தைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் அமைந்துள்ளது.


கொழும்பு மாவட்டத்தில் தனிநபரின் மாதாந்த செலவு 17,625 ரூபாவாக காணப்படுகின்றது.


குறைந்த செலவினத்தைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை மாவட்டம் பதிவாகியுள்ளது. மொனராகலை மாவட்டத்தில் தனி நபர் ஒருவர் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, மாதாந்தம் 16,626 ரூபாய் தேவைப்படுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.   

No comments

Powered by Blogger.