இலங்கையில் முதன்முறையாக, இலவச வாகன தன்சல்
இந்த தன்சலில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு இலவச டியூனிங் சேவைகள் வழங்கப்படும். இலங்கையின் பெரும்பான்மையான வாகன மக்கள்தொகையைக் கொண்ட இந்த வாகனங்கள், பொருளாதாரக் கட்டுப்பாடுகள் காரணமாக பெரும்பாலும் முறையான பராமரிப்பின்றி, தீங்கு விளைவிக்கும் புகை உமிழ்வை ஏற்படுத்துகின்றன.
வாகன டியூனிங் தன்சல் காலை 9:30 மணிக்கு DMT முன் தொடங்கி பிற்பகல் 3:00 மணி வரை தொடரும்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் மோட்டார் வாகனப் புகை பரீச்சித்தல் நம்பிக்கை நிதியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முயற்சி, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் மிகவும் அனுபவம் வாய்ந்த வாகன தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர் பங்குபற்றுவர்.
இந்த தன்சல் மூலம், எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தவும், தேவையற்ற எரிபொருள் செலவுகளைக் குறைக்கவும், தீங்கு விளைவிக்கும் உமிழ்வைக் குறைக்கவும் DMT நம்புகிறது.
இந்த திட்டம் அரசாங்கத்தின் 'க்ளீன் ஸ்ரீலங்கா' முயற்சிக்கு ஏற்ப நடத்தப்படவுள்ளது.
Post a Comment