நீர்கொழும்பு மாநகர சபை மேயர் சட்டதரணி ஹீன்கெந்த, பிரதிமேயர்: சாமர பிரனாந்து
- இஸ்மதுல் றஹுமான் -
நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட சட்டதரணி ரொபட் ஹீன்கெந்தவும் பிரதி மேயராக சாமர பிரனாந்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் 27 உறுப்பினர்கள் வட்டாரங்களில் வெற்றிபெற்றனர். 49 அங்கத்தவர்களைக் கொண்ட நீர்கொழும்பு மாநகர சபைக்கு தேமச 27, ஐமச 9, பொதுஜன பெரமுன 1 முஸ்லிம் காங்கிரஸ் 1, மக்கள் கூட்டனி 1, எட்டு சுயேச்சை குழுக்கள் 10 உறுப்பினர்கள் பெற்றுள்ளனர்.
மாநகர சபை வரலாற்றில் முதற்தடவையாக இம்முறையே தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கின்றது.
2018 ல் நடைபெற்ற நீர்கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஜேவிபி 3 உறுப்பின்களையே பெற்றுக்கொண்டனர்.
மேயராக நியமிக்கப்படடவுள்ள ஹீன்கெந்த பலகத்துறை வட்டாரத்திலும் பிரதி மேயராகவுள்ள சாமர பிரனாந்து குடாப்பாடு வட்டாரத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தியின் சகல உறுப்பினர்களும் 24ம் திகதி சனிக்கிழமை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
Post a Comment