ஜனாதிபதியை சந்திப்பதற்காக அநாகரீகமாக செயற்பட்டவர் குழந்தைகளுடன் கைது
சந்தேக நபர் வெலிபென்ன, தொடம்பாபிட்டிய பகுதியைச் சேர்ந்தவராவார்.
இதன்போது சந்தேக நபர் நுகேகொடை உதவி பொலிஸ் கண்காணிப்பாளரின் கையை கடித்து காயப்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிபென்ன பொலிஸாரின் அநீதி குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம், போர் வீரர் நினைவு நிகழ்வு நடைபெறுவதற்கு முன்பு தெரிவிக்க வேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பொலிஸார் அவரை வேறொரு நாளில் வருமாறு கூறிய போது , இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டு பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதியைச் சந்திக்க அனுமதிக்கப்படாவிட்டால், இரண்டு குழந்தைகளுடன் வீதியில் ஒரு வாகனத்தில் மோதுவதாக கூறி மிரட்டியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து செயற்பட்ட பொலிஸார், அந்த நபரையும் அவரது இரண்டு குழந்தைகளையும் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment