Header Ads



மதிய உணவு பொதியில் புழு


மட்டக்களப்பு நகரில் சாப்பாட்டு கடை ஒன்றில் வாங்கிய மதிய உணவு பொதியில் புழு உள்ளதை கண்டு சட்டத்தரணி ஒருவர் நேற்று (24) முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக குறித்த கடையை சோதனையிட்டு அங்கு மனித பாவனைக்கு உதவாத உணவு தயாரிக்கும் பொருட்களை மீட்டதுடன் குறித்த கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யவுள்ளதாக பொது சுகாதரா பரிசோதகர்கள் தெரிவித்தனர்.


குறித்த கடையில் வழமையாக மதிய உணவு பொதியினை சட்டக்தரணி ஒருவர் வாங்கி சாப்பிட்டு வந்த நிலையில் சம்பவதினமான நேற்று பிற்பகல் 2.00 மணியளலில் மதிய உணவு பொதியினை வாங்கி கொண்டு தனது காரியாலயத்தில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அதில் உள்ள கரட் கறியில் புழு இருப்பதை கண்டுள்ளார்.


இதனையடுத்து புழு உணவு பொதியுடன் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்துக்கு சென்று குறித்த கடைக்கு எதிராக சட்டத்தரணி முறைப்பாடு செய்தார்.

No comments

Powered by Blogger.